சித்தர்கள் என்பவர்கள் மனித வாழ்க்கையின் இலக்கை அடைந்தவர்கள் அல்லது இலக்கிற்கு மிக அருகாமையில் இருப்பவர்கள். இந்த நிலையில் அவர்கள் சாசுவதமானவர்கள்; உடல் இல்லாத நிலையிலும் கூட அவர்களின் இருப்பு முழுமையானது. இனிமேல் அவர்கள் வாழ்ந்து நிறைவேற்றிக் கொள்ள எந்த நிறைவேறாத ஆசையும் அவர்களுக்குள் இருக்காது; இருந்தும் அன்பு மற்றும் கருணையின் காரணமாக அவர்கள் இங்கு இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்து அவர்கள் எட்டிய அனுபவத்தை அடையத் தேவையானதை பகிர்ந்து கொள்கிறார்கள்.
உண்மையில், சித்தர்கள் எல்லா அடையாளங்களையும் விட்டுவிட்டவர்கள் ஆவர். மேலும் அவர் வாழ்ந்த காலத்தில், வெவ்வேறு பெயர்களால் மக்கள் அவர்களை அழைக்கின்றனர்.
இந்த உலகத்திற்கு அவர்களின் பங்களிப்பு அளப்பரியது மற்றும் பரந்துபட்டது. ஆனால் அவை எல்லாவற்றின் நோக்கமும் ஒன்றே, “அவர்கள் அடைந்த அந்த எல்லையற்ற பரவச அனுபவத்திற்கான அழைப்பு மட்டுமே”.
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சாத்தியமாகிற எல்லா வழிகளையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். அவை தமிழிலும் இருக்கின்றன.
அவர்கள் முழு பிரபஞ்சத்தையும் அதற்கு அப்பாலும், அவர்களுடன் சேர்த்து ”ஒன்றாக” பார்க்கிறார்கள். அதில் பிரிவினையே இல்லை. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை, நீங்கள் ஒரு குழந்தையின் கன்னத்தைத் தொடும்போது, மென்மையான தொடுதலின் மகிழ்ச்சி உங்கள் முழு உடலிலும் மனதிலும் அனுபவிக்கப்படுகிறது. தலைகீழ் முறையில், நீங்கள் ஒரு சுடரைத் தொடும்போது, வலி நம் முழு உடலிலும் மனதிலும் அனுபவிக்கப்படுகிறது. இதில் நீங்கள், ”யார் அனுபவிக்கிறார்கள்? என்ன அனுபவிக்கப்படுகிறது? எங்கே அனுபவிக்கப்படுகிறது?” என்று கேட்டால், அந்த எல்லா கேள்விகளுக்கும் பதிலே “உண்மையான அறிவு” அல்லது “ஞானம்”. இந்த ஞானத்திலிருந்தும் விழிப்புணர்விலிருந்தும் நாம் வாழ்க்கைக்கான பதிலை அறியலாம்; நம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம் மற்றும் நமக்கான வழியை அடையலாம். மேலும் சித்தர்களின் உதவியுடன், இது எளிமையானது மற்றும் உறுதிப்படுத்தப்பட்டது.
தமிழில், 18 சித்தர்கள், மனித வாழ்வின் தத்துவம், மருத்துவம், காயகல்பம், இரசவாதம், இலக்கியம் என அனைத்து அம்சங்களுக்கும் பங்களித்திருக்கிறார்கள்.
- Thirumoolar – திருமூலர்
- Agasthiyar – அகத்தியர்
- Bogar – போகர்
- Konganar – கொங்கணர்
- Karuvurar - கருவூரார்
- Sivavakkiyar - சிவவாக்கியர்
- Kuthambai – குதம்பைச் சித்தர்
- Pathanjali - பதஞ்சலி
- Pampatti Siddhar – பாம்பாட்டி சித்தர்
- Sundarandar - சுந்தரானந்தர்
- Valmiki - வான்மீகி
- Sattaimuni – சட்டைமுனி
- Idaikkadar – இடைக்காடர்
- Thanvanthiri - தன்வந்திரி
- Machamuni - மச்சமுனி
- Kamalamuni - கமலமுனி
- Ramadevar - ராமதேவர்
- Korakkar - கோரக்கர்
https://www.youtube.com/watch?v=mfFBc65gG4c&t=6s
நாங்கள் யார்?
முனைவர். திரு.A.S.தாமோதரன் அவர்கள் உண்மையான தேடுதலும் சித்தர்களின் பால் சிறுவயது முதலே ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர். சித்தர்களின் ஆசீர்வாதத்துடன், இப்போது அவர் தனது ஜோதிட அறிவியல் ஆராய்ச்சிகளிலும், வெற்றிகரமான மனித வாழ்க்கைக்காக சித்தர்களின் தத்துவத்தையும் வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகிறார்.
உங்களின் எல்லா கேள்விகளுக்குமான பதில்கள்
ஆன்மீகம்
- கடவுள் யார்?
- எங்கு இருக்கிறார்?
- உலகை எப்படி இயக்குகிறார்?
- மனித வாழ்வியலில் இதன் பங்கு என்ன?
- மந்திரத்தால் கடவுள் சக்தியை உருவாக்க முடியுமா?
- அந்த சக்தி எப்படி அறியப்படுகிறது?
- இதன் சாத்தியக்கூறுகள் யாவை?
- இதனை வாழ்வியலுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம்?
- இதன் ரகசியம் என்ன?
விஞ்ஞான அறிவியல்
- இன்றைய வரை மனித வாழ்வியலுக்கு அறிவியல் என்ன செய்தது?
- இனி என்ன செய்ய வேண்டும்?
- விஞ்ஞானத்தால் அறியப்பட்டது எது?
- அறியப்படாதது எது?
- அறிவியலால் சாதிக்க முடிந்தது என்ன?
- சாதிக்க முடியாதது என்ன?
- இனிமேல் என்ன முயற்சிக்க வேண்டும்?
- இன்றைய அறிவியல் சரியா? தவறா?
ஜோதிடம்
ஒரு தாய் கருவுற்று பத்து மாதங்களில் குழந்தை பிறப்பது இயற்கை. எப்படி இதுதான் விதி என்று, எத்தனையோ லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்களை வைத்து, இதுதான் உன் தலையெழுத்து என்று எப்படி கூறுகிறார்கள்?
- அந்த விதி எப்படி தாயின் கருவுக்குள் செல்கிறது?
- வாழ்வின் நெறிமுறையை எப்படி வழி நடத்துகிறது?
- விதி உண்மையா? பொய்யா? விதியை மாற்ற முடியுமா?
- விதிப்படிதான் அறிவு செயல்படுகிறதா?
- விதி என்றால் என்ன?
- ஊழ்வினை, கர்மவினை என்கிறார்களே, அது என்ன?
- அறிவு ஜெயிக்குமா? விதி ஜெயிக்குமா?
மெய்ஞானம்
- மெய்ஞானம் என்பது என்ன? மெய்ஞானத்தை தெரிந்து கொள்ளும் வழிகள் அறிவியல் ரீதியாகவா? பூலோக ரீதியாகவா? எல்லாவற்றையும் இயக்கி வைக்கின்ற உயிர்சக்தி எங்கு உள்ளது?
- என்னவெல்லாம் இயங்கி இந்த காற்றுமண்டலத்துக்கு உயிர்சக்தியை கொடுக்கிறது?
- இந்த ஜீவ சக்தியை பயன்படுத்தி எப்படி நம் எண்ணங்களை நிறைவு செய்து கொள்ளலாம்?
- நம் அறிவு எப்படி செயல்படுத்தப்படுகிறது?
- வெற்றி தோல்வி எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
இதுதவிர, உங்களுக்கு எந்தத் துறையிலும் எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படும்.
மு.அனுமன்பள்ளி, ஈரோடு - 638101.
தொடர்புக்கு: 98426 04006 / 98427 04006 / 98424 04006